ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

இந்தியாவின் சர்ச்சைக்குரிய குற்ற புள்ளியியல்

நம்முடைய குற்ற புள்ளியியலை நம்பகத்தன்மையுடன் மாற்ற நாம் எது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் புள்ளியியலின்(NCRB) நம்பகத்தன்மை நாட்டில் நிலையாகவே சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக 1990களின் பிந்தைய பகுதியில், ஒரு இலட்சம் பேர் கொண்ட மக்கள் தொகைக்கான குற்றங்கள் நிகழ்ந்தது எண்ணிக்கையில் குறைவானதுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட குற்றங்கள் குறித்து தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டபோது, இந்த நம்பிக்கையற்ற தன்மை சற்று மிகைப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலம் கேள்விக்குரியது. அறுபது ஆண்டுகளாக இந்த நிறுவனம் ஆண்டறிக்கையை அந்தந்த ஆண்டுகளிலேயே வெளியிட்டது. அதன்படி, இந்த அறிக்கை 2017லேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக 2017ஆம் ஆண்டுக்கான ஆண்டு குற்ற புள்ளியியலை வெளியிட்டதில் உள்ள இந்தக் கோளாறு குறித்து, இந்த தாமதம் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்கப்பட்டபோது, சமாதானத்திற்குரிய பதில்களை இந்த ஆணையம் அளித்திடவில்லை. மூன்றாவதாகவும், முதலில் சொல்லப்பட்ட இரண்டு காரணங்களுக்காகவும், ஐந்து ஆண்டுகளில் குற்றங்களின் விகிதம் 33% குறைந்துள்ளது என்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல. 2010ஆம் ஆண்டு 576.99 என்று இருந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு 388.6ஆக மாறியுள்ளது. தற்போதுள்ள மக்கள்தொகை பரிமாற்றமோ அல்லது பொருளாதார பரிமாற்றமோ இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம் என்று கூற முடியாது.

1990களிலிருந்தே தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இது குறித்து சரியாக பதிவானது மட்டுமல்ல, அதிகமாக விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. இத்தகைய குறைவான குற்றங்கள் குறித்த புள்ளியியலின் உண்மைத் தன்மை குறித்து ஒத்துப்போகும்போது, மற்ற தரவுகளின் இரண்டாம் நிலை சாட்சியங்கள் (ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்தியம் கடந்த குற்றம் மற்றும் நீதி ஆய்வு நிறுவனத்தின் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சர்வதேச ஆய்வறிக்கை) இதனை உறுதிப்படுத்துகின்றன. பல்வேறு நாடுகளில், இந்தக் குற்றங்கள் குறைந்ததற்கு பின் உள்ள காரணிகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்கள் இதனை ஓர் அடி முன்னே எடுத்துச் செல்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வமான குற்ற புள்ளியியலை அடிப்படையாக சோதித்துப் பார்ப்பது, மாற்று நடைமுறைகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரே குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த சர்வதேச ஆய்வறிக்கையின்படி, எவ்வளவு குறைவாகக் கிடைக்கிறதோ அந்தத் தகவல்கள் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை உருவாக்கியுள்ளன. இந்த எண்ணிக்கை அந்த ஆண்டிற்கான குற்ற விகிதங்களின் அதிகாரப்பூர்வமான கணக்கீடுகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகவே உள்ளன.

குற்றங்கள் குறைந்ததற்கான காரணங்களின் கட்டமைப்பில் பார்த்தால், இந்தியாவில் குற்ற விகிதங்கள் கீழ்நோக்கி சென்றதற்கான போக்கு குறித்த வழி பிறக்கும். குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு கருத்தியலின்படி பார்த்தால், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புக்களின் தரமும் அளவும் குற்றங்களை கணிசமாக குறைத்துள்ளன. இந்தியாவின் மின்னணு பாதுகாப்பு சந்தையானது 2020ஆம் ஆண்டுக்குள் 2.4 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையிலான ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம் 32%ஆக இருக்கும் என்று  கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் இந்த தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் குற்ற புள்ளியியலை விமர்சனம் செய்ய இந்த கருத்தியல் அடிப்படையிலான கட்டமைப்பை நோக்கினால், இதில் உள்ள சில குறைகள் வெளிப்படும். முதலாவதாக தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் பாரம்பரிய குற்றங்களான கொள்ளை, கார் திருட்டு, தெருக்குற்றங்கள் ஆகியவற்றைக் குறைக்கும். இது மட்டுமல்லாமல் புதிய வகை குற்றங்களுக்கான சந்தர்ப்பத்திற்கும் இது வழி வகுக்கும்.  எடுத்துக்காட்டாக சைபர் திருட்டுக்கள். இவை இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சைபர் குற்றங்கள் குறைந்ததற்கு காரணம் நடைமுறை வழக்கத்தில் உள்ள சில குறைபாடுகளாலா? இரண்டாவதாக, தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு முறை, பொதுவாக வன்மமான குற்றங்களைப் புரிவதற்கான வாய்ப்புக்களை குறைக்கிறது என்றால், மக்கள்தொகையின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்கு, அதாவது பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் போன்றோருக்கு அது ஏன் பொருந்தவில்லை? இவர்களுக்கு எதிராக ஆண்டுதோறும் நடைபெறும் குற்றங்களின் சதவிகிதம் அதிகரித்தது, அவை அதிகமாக தோன்றுவதற்கு எதிர்மறையாக உள்ளதா? தொழில்நுட்பத்தின் மூலம் வழிநடத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களால் இந்தக் குற்றங்கள் குறித்து அறிக்கைகள் வழங்குவது குறித்த விழிப்புணர்வும் முடுக்கிவிடப்பட்டுள்ளனவா? அப்படியென்றால், தர்க்க ரீதியாக, கும்பல் கொலை குறித்த தரவுகளும் இந்த அறிக்கையின் அங்கமாக இருந்திருக்க வேண்டும்.

கும்பல் கொலை என்பது குறித்த அதிகார பூர்வமான வரையறை ஏதும் இல்லாதபட்சத்தில் காவல் நிலையங்களிலிருந்து பெறப்படும் கும்பல் கொலை குறித்த தரவுகள் நம்பமுடியாதவை. இதன் அடிப்படையில் அரசின் கோரிக்கையை மறுப்பது சிரமம். அதைப்போலவே, தேசிய குற்றப் பதிவு ஆணையம் பழைய குற்றங்கள் சிலவற்றை மீள் வகைப்பாடு செய்திருப்பதிலும் அல்லது அதே தர்க்கத்தின்படி புதிய குற்றங்களை வகைப்பாடு செய்வதிலும் உள்ள நம்பகத்தன்மை ஊசலாடுகிறது. இதனை மறுப்பதும் கடினம். எடுத்துக்காட்டாக, “தேச விரோத சக்திகள் நிகழ்த்தும் குற்றங்கள்” என்ற புதிய நடைமுறையைக் கூறலாம். “தேச விரோதம்” என்ற வரையறைக்குள் வராத, எந்தவிதமான கட்டமைப்பும் இல்லாத இந்த வகைப்பாடு சட்டமியற்றும் முறையில் வரையறுக்கப்படாமலேயே இருக்கும். சிக்கலை ஏற்படுத்தும். இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட, கொள்கை இல்லாமல் தரவுகளை உள்ளீடு செய்வதன் மூலம், இந்தியாவில் அதிகாரபூர்வமாக குற்றத் தரவுகள் அளிப்பது அரசியல் ரீதியாக முடுக்கிவிடப்பட்டது என்று யூகிப்பது தவறல்ல.

இத்தகு சூழலில், இந்தியாவில் குற்றங்கள் குறைந்துள்ளது என்பதில் உள்ள நம்பகத்தன்மை குறித்த யூகங்கள் உண்மை. இவ்வேளையில், இந்த புள்ளியியல் விவரங்கள் குற்றவியல் நீதி அமைப்பின் செயல்பாட்டு அளவுகோல்களை, குறிப்பாக காவல் துறையில் உருவாக்குகின்றன என்ற உண்மையை ஒருவராலும் மறுக்க இயலாது. எனவே, இதனுடன் தொடர்புடைய அமைச்சகங்களில் இது குறித்து குறைவான அளவில் தகவல்கள் வெளியிடுவதற்கு போதுமான சாட்சிகள் உள்ளன. குற்றங்கள் குறித்த தரவுகள் பற்றிய கருத்திற்கும் சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. குற்றம் என்பது எப்படி அரசியல், குற்றவியல் நீதித்துறை சார்ந்த செயல்பாடோ, அது போலவே சமூக பொருளாதார காரணிகளின் செயல்பாடு என்பதை நாம் மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக, மாறும் மக்கள்தொகை காரணிகள் குற்றங்களின் அளவீடுகள், நிலைகள் மற்றும் இயல்பில் பொதுவான மாற்றங்களை உண்டாக்க முடியும். இத்தகு சூழலில், அதிகாரபூர்வமான கொள்கைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அதாவது, தனிநபர்களின் திறமை மீது இவை தாக்கம் செலுத்தும் வகையிலும், குற்றத்தின் நடைமுறையை குறுக்கிடும் வகையிலும் இவை தாக்கம் செலுத்த வேண்டும். இத்தகைய குழப்பமான சூழலில், குற்றவியல் நீதி முறையின் நிர்வாகத்துறையை குற்றம் சொல்வதற்காகவும் அவமானப் படுத்துவதற்குமான கருவியாக குற்ற புள்ளியியலை நாம் கண்டால், அரசு நடத்துவதின் முக்கியமான விவகாரங்கள் குறித்த பார்வையை நாம் தவறவிடும் இடத்தில் நின்றுகொண்டிருக்கும் சூழல் ஏற்படும். இந்த முக்கியமான விவகாரங்கள் மக்களுக்கு செயலாற்றல் அளித்து அவர்களை ஊக்குவிப்பதாகும்.

இருப்பினும், அலுவல் ரீதியான செயல்பாட்டை அளவிடும் அளவுகோலாக குற்ற புள்ளியியலை குறைத்து மதிப்பிடுவதால், இந்த குற்றங்களை புரிந்தவர்களை விட இந்த குற்றங்களின் எண்ணிக்கையே முக்கியம் என்ற அதிகாரபூர்வ மனநிலையை நாம் வலுப்படுத்துகிறோம். எனவே, அரசு இந்த செயல்பாடுகளை மாற்று வசதிக்காக – அதாவது குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஆய்வறிக்கைகள் - இவற்றின் குற்ற தரவுகளை குறுக்கு விசாரணை செய்வது ஆகியவை குறித்து வசதியாக மறுக்கவோ, தள்ளிப்போடவோ அல்லது செயல்படுத்தவோ முடியும். இந்த நிலையில் நாம் இரண்டு விஷயங்கள் குறித்து நினைவுகொள்ள வேண்டும். முதலாவதாக, இது ஆட்சி செய்வதற்கான அரசின் கொள்கை. இதன் முடிவெடுக்கும் கொள்கையின் அடிப்படைகளை உருவாக்குவதற்குத் தரவுகள் தேவை. இவற்றிற்கான சிந்தனையை இது அளிக்கிறது. இரண்டாவதாக, இந்த தரவுகளின் தரம். இந்த தரம்தான் நமக்குத் தெரிந்த நெருக்கடியான விவகாரங்களை வடிவமைத்து எவ்வாறு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று தீர்மானிக்கிறது. இவ்வாறாக, மாற்று தரவுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வேளையில், இதன் குறிக்கோள் தற்போதுள்ள குற்ற மதிப்பீடுகளை மோசமானதாகக் கண்டறிவதுடன் மட்டும் நின்றுவிட கூடாது என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இது மிகவும் மோசமாக இருந்தாலும், தற்போதுள்ள எண்கள் ஏன், எவ்வாறு மோசமாக உள்ளன என்று நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

Back to Top