ஜனநாயகத்தில் உண்மையும் போலியும்
.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
நல்லுறுதிமிக்க நேர்மையான ஜனநாயக வாழ்வில், போலி செய்திகள் இருப்பதென்பது அநேகமாக முரண்தொகையான ஒன்றாகவே ஒலிக்கிறது. ஜனநாயகத்தின் இத்தகைய வடிவங்களில், எதார்த்த உண்மைகளும், எவ்வளவுதான் அசௌகரியமானதாக அது இருந்தபோதிலும்கூட, அரசியல் தலைவர்களின் பேச்சுகளின் மூலமாகவும் மற்றும் பல்வேறு வடிவங்களின் மூலமாகவும் வெளிப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். உண்மை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஊடகங்கள் இவற்றை சுற்றுக்கு விடுவதன் மூலமாகவும், ஆழ்ந்து ஆராயும் ஜனநாயகத்தில் தெளிவாக மேற்கோள்ளப்படும் விவாதங்கள் மூலமாகவும் இந்த வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.
உண்மை உளதாம் தன்மை என்பது, சுற்றுக்கு விடுவதன் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் மட்டுமல்ல, ஆழ்ந்து ஆராயும் ஜனநாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தெளிவுபடுத்தும் விவாதங்களிலும், வெளிப்படைத்தன்மையுடன் இருந்திட வேண்டும்.
ஓர் ஒழுங்குமுறை பொறுப்புடனான ஊடகம் தன்னுடைய தகவல் தொடர்புகளின் மூலமாக எவ்விதமான திரிபுகளுமின்றி எதார்த்த நிலைமைகளைச் சுற்றுக்கு விடும் பொறுப்பைப் பெற்றிருக்கிறது. எதார்த்தத்தின் விளைவுகளுடன் சமூகப் பொறுப்புணர்வினை இணைப்பதில் ஊடகங்கள், முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூகத்தின் உண்மை நிலை என்ன என்பதனைக் கண்டறிந்து அதனைச்சுற்றி ஜனநாயக பிரசங்கங்களைக் கட்டி எழுப்புவதில் மிகப்பெரிய பொறுப்பு அதற்கு இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் போலி செய்திகள் ஜனநாயகத்தின் கருத்தியலுக்கு முரணாகத் தோன்றுகின்றன. எனினும், மேற்கத்திய நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, போலிச் செய்திகளின் நூதனக்காட்சிகள் ஜனநாயகத்தை அரித்துக்கொண்டிருப்பதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
எனினும், போலிச் செய்திகள் என்பவை, உண்மை அல்லாத செய்திகள், சிதைக்கப்பட்ட அல்லது உருக்குலைக்கப்பட்ட செய்திகள் அல்லது தவறான செய்திகள் ஆகியவைகளைச் சுற்றுக்குவிடுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. பொய் வாக்குறுதிகளை, குறிப்பாக தேர்தல் பிரச்சாரங்களின்போது அவிழ்த்துவிடப்படும் சரடுகளை, அல்லது படுதோல்வி அடைந்த அம்சங்களைக்கூட பிரம்மிக்கத்தக்க வெற்றி போன்று சித்தரிப்பதையும் போலிச் செய்திகளின் வடிவங்களில் அடங்கும். எதிர்க்கட்சிகளினால் வழக்கமாக ஏற்படுத்தப்படும் புகார்களை ஆராய்கையில் அவை சரியானவைகளாகத்தான் இருந்திருக்கின்றன. பொதுவாக, ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்கள் அல்லது தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் இத்தகைய போலி செய்திகளைப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறார்கள். ஆனால், நம்முன் உள்ள கேள்வி என்னவென்றால்: இத்தகைய அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அல்லது பின்னர் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, பொய்த் தகவல்கள் அல்லது செய்திகள் ஏன் தேவைப்படுகின்றன?
இது சம்பந்தமாக அளிக்கப்படும் எளிதான விடைகளில் ஒன்றாக, தேர்தல் போட்டிகள் என்று கூற முடியும். அமெரிக்காவிலும் சரி அல்லது இந்தியாவிலும் சரி இதுதான் காரணம் எனக் கூற முடியும். அதிகாரத்திற்கான போட்டியில், அரசியல்வாதிகள், தங்களுக்கு எதிராகப் போட்டியிடும் அரசியல் எதிர்ப்பாளர்களைக் காட்டிலும் அனுகூலங்களைப் பெறுவதற்காகவே பொய்ச் செய்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆட்சிக்கு வருகிற கட்சிக்கு, தன்னை ஆட்சியில் தக்க வைத்துக் கொள்வதற்காக, போதுமான அளவில் இல்லாத தரவுகள் மற்றும் பல்வேறு வடிவங்களிலான ஏமாற்று மோசடிகள் போன்ற பொய்த் தகவல்களின் தேவை தொடர்கின்றன.
ஆட்சியிலிருக்கும் இத்தகைய கட்சிகள், தாங்கள் அதிகாரத்தின் பலாபலனைக் கோருவதற்குத் தங்களிடம் தாங்கள் மேற்கொண்ட முன்மாதிரியான நடவடிக்கைகளையோ அல்லது நிறைவேற்றிய உறுதிமொழிகளையோ பெற்றிருக்கவில்லை என்பதே இதன் வெளிப்படையான பொருளாகும்.
வேறுவிதமாகச் சொல்வதென்றால், ஆட்சியிலிருப்பவர்கள், மக்களின் வாழ்நிலைமைகள் சீர்கேடு அடைந்துகொண்டிருப்பது, அதிகரித்துக் கொண்டிருக்கும் சமூகப் பதற்றநிலைமை, சந்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பலருடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கின்ற நிதி நிறுவனங்கள் போன்ற “மோசமான முன்மாதிரிகளைப்” பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள்.
ஆளும் கட்சிகள், மக்களின் செல்வாக்கினை இழக்கக்கூடியவிதத்திலும், எதிர்க்கட்சிகள் புண்படத்தும் விதத்தில் தாக்குதல் தொடுப்பதற்கான காரணிகளை அளிப்பதன் மூலமும் மிகப்பெரிய அளவில் இடரினை எதிர்கொள்ளும் சமயத்தில் மட்டுமே, இத்தகைய மோசமான முன்மாதிரிகளில் நேரடியாக இறங்கிட முடியும். இவ்வாறாக, மேலோட்மாகப் பார்க்கும்போது, பொய்ச் செய்திகளின் இலக்கு என்பது, எதிர்க்கட்சிகளின் குரலை அடைக்கச்செய்வதேயாகும். எனினும், ஆளும் கட்சியின் நோக்கங்களுக்குள் ஆழமாகச் செல்லும்போது, அவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளைக்கூட இரண்டாம் பட்சமாகவே கருதுகின்றன என்பதும், பொய்ச் செய்திகளின் பிரதான நோக்கம், வாக்காளர்களே என்பதும் விளங்கும். இதுதான் மிகச் சரியான காரணமுமாகும். ஏனெனில், வாக்காளர்கள் ‘என்ன நடந்தாலும் அவற்றைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் நமக்கு வாக்களிப்பார்கள்’ என்று ஆட்சியாளர்களால் எடுத்துக் கொள்ள முடியாது. வாக்காளர்கள், சாமானிய மக்களை நெருக்கமாகப் பாதிக்கக்கூடிய பல அடிப்படைப் பிரச்சனைகள் மீது ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு எதிராக மாறலாம். எனவே, வாக்காளர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடமுடியாது. எனவே அவர்களைத் தங்களைப்பற்றிய பொய்ச் செய்திகளைப் பரப்பி எப்போதும் அவர்களைத் தங்கள் பக்கம் நிறுத்தி வைத்துக் கொள்வது தேவை. இவ்வாறு, பொய்ச் செய்திகள் என்பவை உண்மைகள் பற்றியதானது அல்ல, மாறாக அவற்றின் மூலமாக மக்களை உண்மையிலிருந்து தொலைவிற்குத் தள்ளி வைக்கக் கூடியவைகளாகும். இவ்வாறு, பொய்ச் செய்திகள், ஆட்சி அதிகாரத்திற்காக தீராப் பசி கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எப்போதும் தேவைப்படுபவைகளாகும். பொய்ச் செய்திகள் என்பவை இத்தகைய கட்சிகளின் சூழ்ச்சித் திறன்களாகும். பொய்ச் செய்திகளின் விளைவுகள் ஒருவரை அறிவாற்றலுடன் அரித்துத்தின்ன வைக்கக்கூடிய வல்லமை படைத்தவைகளாகும்.
இத்தகையப் பொய்ச் செய்திகளுக்கான கருவியாக மாறும் நபர், உண்மையிலிருந்து பொய்யைப் பிரிப்பதற்கான காரணத்தையோ அல்லது பொய்யிலிருந்து உண்மையை வடித்தெடுப்பதற்கான காரணத்தையோ பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வார். பொய்ச் செய்திகளின் வெற்றி, ஜோடனை செய்யப்பட்டவற்றையும் மற்றும் சிதைக்கப்பட்ட உண்மை வடிவத்தை அல்லது ஆட்சியில் உள்ளவர்களின் உண்மையான செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தைச் சார்ந்திருக்கிறது. பொய்ச் செய்திகளுக்கு மக்களைக் கட்டமைப்பது அவர்களின் சுய உடைமை அல்லது சுயநிர்ணய சுதந்திரத்திற்கான உரிமைகளை மீறுவதற்கு வழிகோலுகிறது. உண்மையில் இது, மக்களின் அலசி ஆராய்ந்து சுயமாக முடிவெடுக்கும் மக்களின் வல்லமையைப் பழுதாக்குகிறது. சாமானிய மக்களும் அவர்களின் வல்லமையும் ஆளும் கட்சியினரின் மறைமுகமான சூழ்ச்சித்திட்டங்களுக்கு எதிராகப் போகலாம்.
ஜனநாயகத்தில் பொய்ச் செய்திகளின் விளைவுகள் என்னவாக இருக்கின்றன? பொய்ச் செய்திகள் என்பவை ஜனநாயகத்தில் ஓர் ஆழமான நெருக்கடி இருக்கிறது என்பதன் அறிகுறியாகும். ஆளும் கட்சிகள் பொய்ச் செய்திகளை, மக்களை ஏமாற்றுவதற்காக, மிகையாகப் பயன்படுத்தினால், அது ஜனநாயகத்தில் நெருக்கடிக்கு இட்டுச் செல்வது மட்டுமல்லாமல், ஜனநாயக அமைப்பு முறையிலேயே மேலும் அதிக ஆழமான நெருக்கடியை ஏற்படுத்திடும். மக்களை சமூக ரீதியாகப் பிளவுபடுத்துவதும், பொருளாதார மந்தமும் இத்தகைய நெருக்கடியின் நிச்சயமான அறிகுறிகளாகும். எந்த நடவடிக்கையும், அதன் இயல்பான தன்மையுடனும் மற்றும் பலாபலனுடனும் மற்றவர்களின் அறியாமை மற்றும் அதிகாரமின்மையை விரிவாக்குவதன்மீது சார்ந்திருக்குமானால், கடைசியில் அது தோல்வியடையும் என்பதே உண்மை.