ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற குழப்பம்

மனிதாபிமானம் என்ற பெரிய பொறுப்புக்கு அப்பாற்பட்டதாகக் குடியுரிமையைக் காண முடியாது

அசாம் மாநிலத்திற்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (என்ஆர்சி) பதிவு செய்வது அந்த மாநிலத்தின் அரசியலைக் கலக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகள் குறித்து பல்வேறு சமூக சக்திகள் கருத்துக்களை வெளியிடுகின்றன. என்ஆர்சியின் கர்த்தாக்கள் மத்தியில், ஆளுங்கட்சி உட்பட, இதன் பயன் குறித்து ஒருவிதமான அதிருப்தி உணர்வு உள்ளது. இதன் கர்த்தாக்கள் கூறியதைவிட, தள்ளப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும், பாரதீய ஜனதா கட்சிக்கு அதிருப்தி அளித்த விஷயம் எதுவென்றால், அவர்களது மாபெரும் சமூக மற்றும் வாக்கு வங்கியில் உள்ள பெரும்பாலோர் விலக்கப்பட்டிருப்பதுதான். (இத்தகைய விலக்கலில் பாரபட்சமும் நியாயமற்ற தன்மையும் பின்பற்றப்பட்டதை சிறிது காலம் தள்ளிவைக்க முடிந்தால்) இந்த எண்கள் சிறிதாக இருப்பது குறித்து நிம்மதி அடைவதுதான் எதார்த்தம். இந்தப் பதிவேட்டிலிருந்து புறந்தள்ளப்பட்ட மக்களின் துண்பங்களையும் அதில் ஏற்பட்ட ஆழமான மனிதாபிமான சிக்கல்களையும் கருதும்போது, இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது மகிழ்ச்சி. இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாட்டுக்காரர்கள் தீர்ப்பாயத்திலும் நீதிமன்றங்களிலும் மேல் முறையீடு செய்யும் இன்னலுக்குத் தள்ளப்பட்டார்கள். பாழ்பட்ட சூழ்நிலைகளுக்கு பெயர்போன அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.  அவர்கள் நாடில்லாதவர்கள் அல்லது இரண்டாம்தர குடிமக்கள்  என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது மக்களுக்கு எண்ணில்லா துயரை அளித்தது. இவர்களுள் பெரும்பாலானோர் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட வாழ்கையைத்தான் வாழ்ந்துள்ளனர். எனினும் ஆளுங்கட்சியின் அலுவல்நிரலும் இது தொடர்பான வக்கிரமான கணக்கீடுகளும் இவர்களது இன்னல் குறித்து எள்ளளவும் இரக்கப்படுவதில்லை. உண்மையில், என்ஆர்சி என்னும் கருத்தியலின் தர்க்கமானது- சிறுபான்மையினரைப் பிரிக்கும் வார்த்தை ஜாலம் பொதுவாக அரசியல் ரீதியாக உயரும்போது – இத்தகைய மனிதாபிமான நெருக்கடிகள் முன்னரே யூகிக்கக்கூடியதுதான். அசாம் மாநிலத்தைத் தாண்டிய அரசியல் மற்றும் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுதான்.

என்ஆர்சி போன்ற ஒரு செயல்பாட்டின் அடிப்படை  உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள், கட் ஆஃப் தேதிகள், நிலத்தின் மீதான உரிமை கோரல்,  ஆகிய விவகாரங்களில் வேர் விட்டிருக்கிறது. இது ஏற்கெனவே உள்ள சமூக பதற்றங்களை மேலும் தீவிரமாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயல்பாட்டிற்கு பின்னே உள்ள நோக்கங்கள் சில நெருக்கடிகளுக்கு முடிவு கட்டுவதும், பரஸ்பர சந்தேகங்களுக்கான சூழ்நிலையை களைவதுமாகவும் இருக்கலாம். இந்த நோக்கங்களை உணர்வது, சமூகக் குழுக்களுக்குள் ஒரு சமரச நடவடிக்கையைக் கோரலாம். தற்காலத்தில் ஒரு கருத்தொற்றுமையை உணர்ந்து எதிர்காலத்தை வடிவமைக்க,   வரலாற்றின் சுமைகளுக்குள் ஒரு சமரசத்திற்கு வரலாம்.  எனினும்  ஒரு நாகரிகமான சமூகத்திற்கு விரிவான பார்வையும் வலிகள் நிறைந்த முயற்சிகளும் தேவைப்படுகிறது. ஆளும் கட்சியின் அரசியல் நிரலில் இத்தகைய பார்வை குறைவாக உள்ளது. இத்தகைய குறுகிய பார்வைக்கேற்றபடி ஆளும் கட்சியின் அரசியல் நிரல் இருக்கும்போது, தனது தேர்தல் செல்வாக்கை நிலைநிறுத்த இத்தகைய செயல்பாடுகளை ஆளும் கட்சி எடுப்பது தெள்ளத்தெளிவாகிறது. இத்தகைய சூழ்நிலையில் அசாமில் சமரசம் ஏற்படுத்த முயன்ற சில முற்போக்குவாதிகளின் செயல் பொய்த்துப்போனது. என்ஆர்சியின் பின்னணியில் தலைவர்கள் விடுத்த அறிக்கைகளின் ஊடுருவல்காரர்கள், கரையான்கள் போன்ற வார்த்தைகள் விரவியே உள்ளன. குறிப்பிட்ட சமூகங்களிலிருந்து நியாயமற்ற உள்ளீடுகளைக் கோருகின்றனர்.  சமூக பிளவுகளை ஊக்குவிக்குப்பதற்கான நடவடிக்கைகள் இருந்ததற்கு தெளிவான சமிக்ஞைகள் உள்ளன. மற்றவர்களிடம் நிலையாக அச்சமூட்டும் அரசியலில் சமரசமும் மூடிவைப்பதும் போதாத அம்சங்களே.

பாரபட்சமான நடைமுறைகள், வகைப்பாடு மற்றும் இந்த செயல்பாட்டில் பின்பற்றப்படும் தேவைகள்  ஆகிய அனைத்தும் இந்த விலக்கல் தர்க்கத்திற்கு உதவியுள்ளன. பல்வேறு குழுக்களிடமிருந்து பல்வேறு விதமான ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இவை இதன் கட்டமைப்பிலேயே வேறுபாடு நிறைந்த நடைமுறையைக் கொண்டுள்ளது. பிறப்பால் குடியுரிமை பெறும் கொள்கையிலிருந்து, பாரம்பரிய ஆவணங்களுக்கான தேவையானது பாதைவிலகுகிறது. இத்தகைய பாதை மாறுதல்கள் பிறரை விலக்கிவைக்கும் நிறுவனத்தை அச்சுறுத்துகின்றன. ஆளும் கட்சி என்ஆர்சி என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்ததின் பின்புறத்தில் இந்தக் குறிக்கோளே உள்ளது போல் தெரிகிறது. என்ஆர்சி போன்ற நடைமுறையை மற்ற மாநிலங்களிலும், நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளிலிருந்து இது தெளிவாகிறது. அசாம் மாநிலத்திற்கு வரலாற்று ரீதியாகவே சில விசித்திரங்கள் உண்டு. இது ஒரு  தர்க்கரீதியான வழக்கு. தார்மீக தளங்களில் இது மிகவும் சிக்கலானதாகவே இருந்தாலும், இந்த நடைமுறை அந்த மாநிலத்தில் சாத்தியம். ஆனால் இதே தர்க்கத்தை தில்லியிலோ அல்லது தெலுங்கானாவிலோ அல்லது மகாராஷ்டிராவிலோ  செயல்படுத்த முடியுமா? இதற்கு சாத்தியமாக உள்ள ஒரே தர்க்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இலக்காக வைத்து குழப்பம் ஏற்படுத்துவதுதான். நாடு முழுவதும் என்ஆர்சியை நடைமுறைப்படுத்துவது குறித்து பல்வேறு வதந்திகள் உருவாகின்றன. அங்கங்கே அகதிகள் முகாம்கள் உருவாக்குவது பாதுகாப்பற்ற தன்மையையும் பதற்றத்தையும் தோற்றுவிக்கிறது. சட்ட பூர்வமாக இரண்டாம் தர குடிமக்களாக்கப்படுவது குறித்த பதற்றமும், அத்தகைய மாற்றம் உண்மையிலேயே நடந்தேறுவதும் உணரக்கூடிய மாற்றமாகவே உள்ளது. இவற்றிற்கு உணர்வு பூர்வமான உத்தரவாதங்களுடன் விடை அளிக்க வேண்டும். தனது குறிக்கோள்களுக்கு பொருந்துமாறு ஆளுங்கட்சியிடம் குறிப்பிட்ட  வகுப்புவாத இலக்குகள் உள்ளன. இருப்பினும் இத்தகைய கோரிக்கைகள் பல்வேறு செங்குத்தான மற்றும் படுக்கைவாட்டிலான கோடரிகளை வளைக்கும். இந்தியா போன்ற வேற்றுமையும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த நாட்டில் நிலையான முரண்பாடுகளை இவை தோற்றுவிக்கும்.

அடிப்படை மட்டத்தில் இந்த விவகாரங்களை கையில் எடுக்கும்போது, அதாவது குடியுரிமை போன்ற கேள்விகள் பெருமளவிலான மக்கள் தொகையின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். ஆதிகாலந்தொட்டு இருக்கும் அடையாளத்தை  அரசமைப்புச் சட்டத்திற்காக மாற்றுவது நம்மால் இயலுமா? மனிதம் காலங்காலமாக புரிந்துகொண்ட விழுமியங்களை அரசமைப்புச் சட்டத்தை காரணம் காட்டி முறைப்படி சாமானியர்கள் புரிந்துகொள்வது சாத்தியமா? புலம்பெயர்தல்  மனித நாகரிக வளர்ச்சியின் வரலாற்று உண்மை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  புலம்பெயர்தலின் முக்கியத்துவம் பல்வேறு காரணங்களுக்காக நமது காலத்தில் பன்முறை அதிகரித்துள்ளது. குடியுரிமை மற்றும் அது தொடர்பான உரிமைகள் அரசினை மையமாக வைத்து இல்லாமல், மனிதாபிமானத்தை மையமாக வைத்துப் பார்க்கவேண்டிய தேவை உள்ளது. பழமையாக இருந்து வரும் அடையாளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மனிதர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது இந்தியாவை ஓர் இன அடிப்படையிலான ஜனநாயகமாக மாற்றும். இதன் மோசமான எல்லை இந்தியாவை ஒரு மதவெறி கொண்ட நாடாக மாற்றும். இப்போது எது தேவை என்றால், அரசமைப்புச் சட்டத்தை குடியரசுத் தத்துவத்தின் அடிப்படையுடன் ஒத்துப்போகத்தக்க குடியுரிமையை வளர்ப்பதுதான்

 

Back to Top